ஒபாமாவும், மோடியும் இணைந்து பங்கேற்ற சிறப்பு மன் கி பாத் நிகழ்ச்சி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், பிரதமர் மோடியும் இணைந்து பங்கேற்ற சிறப்பு மன் கி பாத் நிகழ்ச்சி இன்று அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பானது 35 நிமிடங்கள் ஒலிபரப்பபட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசாமல், தனிப்பட்ட விவகாரம் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் உரையாற்றினார்.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

* கடந்த சில மாதங்களாக நான் உங்களிடம் பேசி வருகிறேன். இன்று நம்முடன் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணந்துள்ளார்.

* மார்ட்டின் லூதர் கிங் பற்றியோ அல்லது ஒபாமா பற்றியோ நாம் பேசும்போது அவர்கள் காந்தியால் ஈர்க்கபட்டதாஇ பேசுவதை நாம் அறிகிறோம்.
* நான் வெள்ளை மாளிகைக்குள் நுழைவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

*பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி ஆகியவை சமூகத்தின் பொறுப்பாக உள்ளது.

*இன்றைய உலகை இளைஞர்கள் ஒருங்கிணைக்க முடியம். முன்னேற்றத்திற்கு உயர்கல்வியே அவசியமானது

ஒபாமா பேசியதாவது:

*ரேடியோ மூலம் மக்களுடன் பேசுவது பெருமையாக உள்ளது.

* இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள்.

*இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்த பல வரலாற்று சாதனைகள் செய்துள்ளோம்.

*இந்தியாவில் மோடியின் பணிகளை பார்த்து அமெரிக்க மக்கள் பெருமைப்படுகின்றனர்.

எனது குழந்தைகள் இந்தியாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா வரவும் அவர்கள் ஆசைப்படுகின்றனர்.

*இந்தியாவின் பெருமைப்பற்றி எனது குழந்தைகளிடம் எடுத்து கூறுவேன்.

*ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பின்னர் எனது குழந்தைகளுடன் இந்தியா வருவேன்.

*தொற்று நோய் பிரச்னை பற்றி மோடியுடன் பேசினேன்.

*பொதுவான பிரச்சினைகள் பற்றி நானும்மோடியும் பேசினோம்.

*நானும்மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து முன்னேறியுள்ளோம்.

நாட்டு மக்கள் மீது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார்.

அகிலஅதிபர்அமெரிக்காஇந்தியாஒபாமாஒலிபரப்புசிறப்புசுற்றுப்பயணம்நிகழ்ச்சிபங்கேற்புபிரதமர்மன்கிபாத்மோடிவானொலி
Comments (0)
Add Comment