ஒரு நாள் விவசாயியாக இருந்து பாருங்க புத்தி வரும் : எச்.ராஜாக்கு இயக்குநர் பாண்டியராஜன் பதிலடி

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அறிவித்த மத்திய அரசு மக்கள் போராட்டங்களுக்கும் செவிசாய்க்காமல் இருந்து வருகிறது. அதனால் அந்த திட்டம் ரத்து செய்யப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 12 ந் தேதி தொடங்கி இன்றுடன் 18 வது நாளாக தொடந்து நடத்தி வருகின்றனர். 18 வது நாள் போராட்டத்தில் திரைப்பட இயக்கநர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார்.

 அவர்,  ‘’மக்களை ஏமாற்றும் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக சொல்லி மறுபடியும் ஏமாற்றி வருகிறார்கள். ஹைட்ரோ கார்பன் எடுக்க குப்பையில் இருந்து எடுக்கலாம். பிறகு அந்த குப்பையை மாற்று உரமாக பயன்படுத்தலாம். ஆனால் குப்பை நாறும் என்பதால் அந்த திட்டத்தை கையில் எடுக்கவில்லை.

  இந்த மக்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இனி காந்தி வழியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதாவது வரி கொடாமை போராட்டம், தேர்தல்களை புறக்கணித்து கட்சிக் கொடிகளை புறக்கணிப்பது போன்ற போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக கூறினார்கள்.

 நான் இந்த மண்ணின் மைந்தன் புதுக்கோட்டைக்காரன் என்ற அடிப்படையில் போராட்டங்களில் கலந்து கொள்வேன். அதனால் என்மீது கஞ்சா வழக்கு போடலாம், சில்மிஷ வழக்கு கூட போட்டு சிறைக்கும் அனுப்பலாம். அதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன். என் மண்ணுக்காக போராடுவேன்.

 எச்.ராஜா, தமிழிசை போன்றவரிகளின் பேச்சு பற்றிய கேள்விக்கு..

  அவர்களுக்கு என்ன தெரியும் மண்ணின் அருமை. சென்னையில் ஏசி ரூமில் இருந்து கொண்டு பீசா தின்னுட்டு பேசறவங்க.  ஒரு நாள் விவசாயியாக இருந்து பாருங்க புத்தி வரும். அதன் அருமை தெரியும் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜன்எச் ராஜாநெடுவாசல்போராட்டம்விவசாயிஹைட்ரோ கார்பன் திட்டம்
Comments (0)
Add Comment