இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தம் 31ஆவது நாளை எட்டியுள்ளது.
இதனால் 35 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம், ஜெதாபட்டினம், மண்டபம் மற்றும் நாகை பகுதிகளைச் சேர்ந்த 62 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
அவற்றை மீட்க வலியுறுத்தியும், பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தரக் கோரியும், சேதப்படுத்தப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் வழங்க வற்புறுத்தியும் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.