ஒரே நாளில் துவரம் பருப்பு விலை மூட்டைக்கு ரூ.1,500 உயர்வு; கிலோ ரூ.200ஐ தொட்டது

துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையிலும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 சென்னையில் 100 கிலோ கொண்ட துவரம் பருப்பு மூட்டை ஒன்றின் விலை ஒரே நாளில் ஆயிரத்து 500 ரூபாய் உயர்ந்து 18 ஆயிரத்து 500 ரூபாயை தொட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 சில்லறை விற்பனையில் முதல் ரகத் துவரம் பருப்பு 180 ரூபாய் முதல் 195 ரூபாய் வரை விற்கப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. பாக்கெட்டில் விற்கப்படும் துவரம் பருப்பின் விலை கிலோவுக்கு 210 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான்சானியா துவரம்பருப்பு விலை கிலோவுக்கு 160 ரூபாய் ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

சில்லறை விற்பனைதுவரம் பருப்புமத்திய அரசுமூட்டைவிலை உயர்வு
Comments (0)
Add Comment