ஒற்றுமையாக போராடினால் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற முடியும் என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நடந்த மகளிர் பிரிவு மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படு்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இருப்பினும் தற்போதைய மத்திய அரசு முந்தைய அரசின் திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றி தம்முடைய திட்டம் போன்று செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசை காங்கிரஸ் கைப்பற்றுதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இதன்படி ஒற்றுமையுடன் செயல்படும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் , அதற்காக அதி காலம் காத்திருக்க தேவையிருக்காது.
மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா விவகார நிலைப்பாட்டில் இருந்து காங்கிரஸ் ஒரு போதும் பின் வாங்காது. பார்லியில் மகளிர் மசோதா விரைந்து நிறைவேற்றும் படி தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் கட்சி நிர்பந்தம் அளிக்கும் என சோனியா கூறினார். மாநாட்டில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.