ஓமந்தை பகுதியில்  பெருமளவு கேரள கஞ்சாவினை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

வவுனியா – ஓமந்தை பகுதியில்  பெருமளவு கேரள கஞ்சாவினை  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக பெருமளவு கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து  வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேதபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த  கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள்

இது தொடர்பில்   வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சி. துசாந்தன் (வயது 23) , மல்லாவி க.சபேசன் (23வயது) , யாழ். தொண்டமானாறு  ஆர். ரஜீபன் (28 வயது) ஆகியோரை   பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேலும்  கைப்பற்றப்பட்ட  கஞ்சாவையும்  சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கேரள கஞ்சாசந்தேக நபர்கள்வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர்வவுனியா - ஓமந்தை
Comments (0)
Add Comment