அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை இங்கிருந்து செல்லுமாறு எச்சரித்தனர். மேலும் மீனவர்களின் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கி மீன்பிடி வலைகள், சாதனங்களை சேதப்படுத்தினர். தொடர்ந்து படகில் இருந்த மீன்களையும் கடலில் வீசினர். அப்போது சர்பு தீன் படகில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர் களை தாக்கி படகோடு சிறைபிடித்து சென்றனர்.
கடலுக்குச் சென்ற அனைத்து படகுகளும் கரை திரும்பியதும் தான் சர்புதீன் படகு சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. இதனால் ராமேசுவரம், தங்கச்சிமடம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதற்கிடையில் நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேரும் ஒரு படகுடன் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 13 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கையில் உள்ள காங்கேசன் துறை முகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்று காலை அவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.