கஞ்சா செடியினை பூஞ்செடி என நினைத்தேன் -கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம்.

 

சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக அமைப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக  பொலிஸாருக்கு  கிடைத்த  தகவலை அடுத்து,

அங்கு சென்ற பொலிஸார்  அங்கு வளர்ந்த கஞ்சா செடியினை மீட்டதுடன் அதனை வளர்த்ததாக தென்னிலங்கை தெல்தெனியை சேர்ந்த கட்டட தொழிலாளியையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் நேற்றைய தினம் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது , கஞ்சா செடியினை பூஞ்செடி என நினைத்தே அதனை அழிக்காது விட் டதாக  அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதோடு  குறித்த  செடி கட்டடத்தில் தானாகவே வளர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து  குறித்த நபரை ஒரு இலட்ச ரூபாய்   காசு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கஞ்சா செடிகாசு பிணைபூஞ்செடிவாக்குமூலம்
Comments (0)
Add Comment