கடத்திசெல்லப்பட்ட 601 வேப்பம் தீராந்திகள் மாங்குளம் பொலிசாரால் பறிமுதல்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட ஏ-9 வீதியின் மாங்குளம் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக உள்ள  பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கடத்தப்பட்ட 601 வேப்பம் தீராந்திகள் மற்றும் கடத்தி சென்ற நபர்கள் 2 பேரை  மாங்குளம் பொலிசார் கைது செய்துள்ளனர்

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

 வீதி காவலில் ஈடுபட்டிருந்த பொலிசார் மேற்ப்படி மரங்களை  ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது அனுமதிப்பத்திரமின்றி மரத் தீராந்திகள்  கடத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது

இதனடிப்படையில் .மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வி பி ஜெ புஸ்பகுமார அவர்களின் ஆலோசனைக்கமைய வீதி பாதுகாப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எஸ் ஜ விஜயபண்டார பொலிஸ் உத்தியோகத்தர்களான  சரத்(53777) வீரதுங்க  (45396) நிகால்  (47980 ) ஆகியோரினால் சட்டத்துக்கு முரணாக கொண்டு செல்லப்பட்ட 601 வேப்பம் தீராந்திகளையும்   கடத்தி சென்ற இருவரையும்  கைது செய்ததோடு கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது

விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மாங்குளம் பொலிசார் கைது செய்யப்பட்ட நபர்களை  முல்லைத்தீவு நீதிமன்றில் முற்ப்படுத்தியபோது இரண்டு  நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு 29.11.2018 ம் திகதி வழக்கு தவனையிடப்பட்டுள்ளது

இதேவேளை தொடச்சியாக மாங்குளம் பொலிசாரால் மரக்கடத்தல்கள் மற்றும் சட்டவிரோத  மணல் அகழ்வுகள் தடுக்கப்பட்டாலும் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணமே உள்ளது

அந்தவகையில்  அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு உழவு இயந்திரமும் சாரதியும் சட்ட முறைகளுக்கு முரணாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 15 உழவு இயந்திரம் மற்றும் 1 5 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இந்த சட்ட விரோத தொழில்களை நிறுத்துவதற்கு மக்கள் தமக்கு தகவல்களை வழங்கி உதவுமாறும் பொலிசார் கோரியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

கடத்தல்நீதிமன்றம்பொலிஸார்மாங்குளவேப்பமரம்
Comments (0)
Add Comment