லுணுகல, படாவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை மற்றும் இராணுவ சீருடைகள் மூன்றை வைத்திருந்த முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை ஊவா மாகாண பொறுப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ஜகத் பலிஹத்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை சந்தேகநபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 18 கடவுச் சீட்டுக்களும் 7 அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 வயதுடைய குரித்த சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை லுணுகல பொலிஸார் முன்னெடுத்து வருவதாக மேலும் கூறப்பட்டுள்ளது.