திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் பல பேர் காணாமல் போயுள்ள நிலையில், இதுவரை 28 பேர் இறந்துள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு ,உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு சார்பாக நிவாரண உதவிகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில், கடலூரை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிய இன்னும் ஒரு வார காலமாவது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.