ஸ்ரீலங்கா விமானப்படையின் பேச்சாளர் விங்கொமாண்டர் சந்திம சில்வா இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
முன்னதாக ஆயுத களஞ்சிய வசதிகள் தொடர்பில் விமானப்படை ஆய்வுகளை மேற்கொண்டது.அத்துடன், வெடிபொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதிகளிலுள்ள ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பாதுகாப்பான இடங்களில் களஞ்சியப்படுத்துவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் இருந்த மேலதிக வெடிபொருட்களை தற்போது பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 5ஆம் திகதி கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பாரியளவிலான ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.
இதனையடுத்து, முப்படைகளின் ஆயுதக் களஞ்சியங்களை மக்கள் தொகை குறறைவான இடங்களுக்கு மாற்றம் செய்ய பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.