கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இருவர் பிணையில் விடுவிப்பு…

அமெரிக்கா செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நோக்கி மோசடியான முறையில் செல்வதற்காக  சென்றபோதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்த எனவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர்கள் இருவரும்   நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது பத்தாயிரம் ரூபா மற்றும் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியில் இரு சரீர பிணையிலும் அவர்களை  விடுவிப்பதற்கு நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிகப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கைதுபிணைவிடுதலைவிமான நிலையம்
Comments (0)
Add Comment