கதிரமங்கலத்தில் கைதனவர்களை உடன் விடுதலை செய்யுங்கள்!

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

அப்போது தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மனு அளித்தனர். பின்னர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறாமலும், மக்கள் விருப்பத்தை பெறாமலும் ஆழ் குழாய் கிணறு அமைத்து எண்ணெய் எடுத்து வருகிறது.

தற்போது அங்குள்ள எண்ணெய் குழாயில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் பொதுமக்கள் தான் தீயை கொளுத்தினார்கள். போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் தான் தடியடி நடத்தியதாக புகார் கூறி வருகிறார்கள். கதிராமங்கலத்தில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

அவர்களை விடுதலை செய்ய எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் ஆகும்.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து உள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார்.

இவ்வாறு பி.ஆர். பாண்டியன் கூறினார்.

கதிராமங்கலம்கைதுசிறைதமிழகம்போராட்டம்
Comments (0)
Add Comment