கனகாம்பிகை குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இந்துபுரம் கிராமத்தினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கனகாம்பிகை  குளத்திலிருந்து சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த டசலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 5 பிள்ளைகளின் தந்தையான இந்துபுரம் திருமுருகண்டி பகுதியை சேர்ந்த  52 வயதுடைய பொன்னையா திருநீலகண்டன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி  பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.

ஆண்கனகாம்பிகைகிளிநொச்சிகுளம்சடலம்
Comments (0)
Add Comment