கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயத்தின் அத்திபாரம் உடைத்து புத்தர் சிலை அமைக்கும் பணிகள்…மக்கள் விசனம்

கன்னியா வெந்நீரூற்று ஏழு கிணறுகள் அமைந்துள்ள இடத்துக்கு அருகில் பிள்ளையார் ஆலயத்தின் அத்திபாரம் உடைக்கப்பட்டு அந்த இடத்தில் புத்தர் சிலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

புத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான சிலர் கடந்த ஒருவார காலமாக, இந்தச் சர்ச்சைக்குரிய கட்டுமானத்தை மேற்கொண்டுவருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதோடு குறித்த இடம் தொல்பொருள் திணைக்களத்துக்குரிய இடம் என அந்த திணைக்களம் அடையாளப்படுத்தியிருக்கும் நிலையில் அவ்விடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமை சர்ச்சையைத் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் குறித்த விவகாரம் திருமலை மாவட்ட அரச அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், புத்தர் சிலை வைக்கும் பணிகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

எனினும், நேற்றையதினமு,ம் பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரம் உடைக்கப்பட்டுப் புத்தர் சிலை வைக்கும் பணிகள் தொடர்ந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கன்னியா வெந்நீரூற்றுபிள்ளையார்புத்தர் சிலை
Comments (0)
Add Comment