கருணாநிதி அடிமையாக இருக்கிறார்: அழகிரி

திமுக தலைவரும் தனது தந்தையுமான மு கருணாநிதி சிலரின் வற்புறுத்தலுக்கும் பிளாக் மெயிலுக்கும் அடிபணிந்தே தன்னை திமுகவிலிருந்து நீக்கியிருப்பதாக  மு.கருணாநிதியின் மகனும் திமுக தென்மண்டல செயலாளருமான மு .க அழகிரி.

அதேசமயம், திமுகவின் உட்கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாலேயே மு.க.அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி திமுக உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி தற்காலிகமாக நீக்கப்பட்டிருப்பதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

மு.க.அழகிரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது குறித்து அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “கட்சிக்குள் ஏற்படும் அபிப்பிராயப் பேதங்கள், கோபதாபங்கள் இவைகளைப் பற்றி முறையிட, கட்சிக்குள்ளேயே முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் கட்சியின் தலைமைக் கழகத்தில் இருக்கின்ற நிலையில்; தங்கள் எண்ணங்களை வெளியிடவும், கட்சியின் கட்டுப்பாட்டைக் குலைக்காமல் காப்பாற்றவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் முறைப்படியுள்ள கட்சி அமைப்புகளைக் கலந்து பேசாமலும், அந்த அமைப்புகளை மதிக்காமலும், வேண்டுமென்றே திட்டமிட்டு, திமுக அணியோடு கூட்டணி சேர நினைக்கின்ற கட்சிகளின் தலைமையைப் பற்றி அவதூறு கூறி கூட்டணி ஏற்படுவதைக் குலைக்க அழகிரி முயற்சித்ததாக” குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யென்றும், தவறானவையென்றும் மறுத்த மு க அழகிரி, கருணாநிதி மற்றவர்களின் வற்புறுத்தலுக்கு பயந்தே தன்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறும் அழகிரி, தனது பிறந்தநாளன்று மதுரையில் வைத்து தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை பெற்று அதன்படி தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.

அடிமைகருணாநிதிதிமுகமதுரைமு .க அழகிரி.
Comments (0)
Add Comment