கருணாநிதி உடல்நிலை தொடர்பில் மருத்துவமனை விளக்கம்

திமுக தலைவரான கருணாநிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக தனது  இல்லத்தில் ஓய்வு எடுத்து வந்தார்.

95 வயதான இவருக்கு கழுத்துப்பகுதியில் உணவுக்குழாய் பொருத்தப்பட்டிருந்த நிலையில் , சமீபத்தில் அவருக்கு இந்த குழாய் மாற்றப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும்,  அதில் வயது மூப்பின் காரணமாக அவரது உடல்நிலையில் நலிவு ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரின்  சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் காரணமாக அவருக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கலைஞர் கருணாநிதியின் உடல்நிலையினை கருத்தில் கொண்டு அவரை யாரும் பார்க்க வரவேண்டாம் என அந்த அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கைஉடல்நலம்கருணாநிதிமருத்துவமனைவெளியீடு
Comments (0)
Add Comment