இந்தத் தாக்குதல் தொடர்பான வழக்கு, அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த நட்டத்தொகை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளால், வான் மற்றும் தரை வழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இதனால், விமானப்படைத் தளத்தின் விமான ஓடுபாதையில் தரித்து வைக்கப்பட்டிருந்த 10 விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் மேலும் 6 விமானங்கள், பகுதியளவில் சேதமடைந்தன.
விடுதலைப்புலிகளின் கரும்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக, 14 இராணுவத்தினர் ஸ்தலத்திலேயே பலியாகினர்.
இந்தத் தாக்குதல், 2007 ஒக்டோபர் 22ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்டது. யுத்தம் இடம்பெற்ற மூன்று தசாப்தங்களில், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் பெரிதும் பேசப்பட்ட தாக்குதலாகவே இந்தத் தாக்குதல் காணப்பட்டது.
நன்றி. தாங்கள் group info வை படிக்க வேண்டுகிறேன்.