கரும்பு விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.4.50 மானியம்

கரும்பு விவசாயிகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த மானியமாக குவிண்டாலுக்கு 4 ரூபாய் 50 காசு வழங்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

2015 – 16 பயிர் பருவத்துக்கான இந்த மானியம் மூலம் கரும்பு விவசாயிகள் பலன் பெறுவார்கள் என அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார். இத்தொகை கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மறுபுறம் அமைச்சரவையின் மற்ற முடிவுகள் குறித்து பேசியபோது ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் 3 சதவிகித வட்டி மானியம் வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியாவின் 10 சதவிகித பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக பியுஷ் கோயல் தெரிவித்தார். இதன்மூலம் அரசுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஒப்புதல்கரும்புமத்திய அரசுரூ.4.50 மானியம்விவசாயிகள்
Comments (0)
Add Comment