கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை அமர்வின்போது பொலிஸார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
கரைச்சி பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விசேட அமர்வு இன்று இடம்பெற்றது.
இதன்போதான விவாதத்தின் போது கரைச்சி பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர் இ. இளங்கோவன் தவிசாளரை கைநீட்டி கதைத்துள்ளார்.
இதனையடுத்து சபையில் அமளி துமளி ஏற்பட்ட நிலையில், இளங்கோவனை வெளியேறுமாறு தவிசாளர் பணிப்புரை விடுத்த போதும் அவர் வெளியேறவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இதனால் சபை அமர்வுகள் சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு, கிளிநொச்சி பொலிஸாரை பாதுகாப்பிற்கு அழைத்த பின்பு தவிசாளர் சபை அமர்வுகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.