மட்டக்களப்பு கல்முனையில் மௌலவி ஒருவா் மீது இளைஞா்கள் தாக்குதல் நடாத்தியதை தொடா்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
இந் நிலையில் அங்கு பெருமளவு இராணுவத்தினா், மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வீதியால் சென்ற மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.