காட்டில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கேரள கஞ்சா மீட்பு

மடு சின்னப்பண்டிவிரிச்சான் காட்டில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முந்தினம் இடம்பெற்றுள்ளது.

யாழில் இருந்து மாறுவேடத்தில் சென்ற சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலை அவர்கள் அங்கு சென்று கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  பொலிசார் பிடிக்க முயன்றபோது இரு சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

கஞ்சாகாடுசின்னப்பண்டிவிரிச்சான்பொலிஸார்மடு
Comments (0)
Add Comment