காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் இடைக்கால அறிக்கை இன்றையதினம் ஜனாதிபதி யிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது
இதனை ஜனாதிபதி சட்டத்தரணி சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணிமனை செயற்பட ஆரம்பித்த குறுகிய காலத்தில் மேற்கொண்ட சந்திப்புகள் மற்றும் செயற்பாடுகளின் அடிப்படையில் குறித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு வழங்கப்படக்கூடிய இடைக்கால நீதி நிவாரணம் உள்ளிட்ட விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த அறிக்கையானது கடந்த மாதம் 30ம் திகதியே ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவிருந்த நிலையில் அவர் வெளிநாடு சென்ற காரணத்தினால், இன்றையதினம் கையளிக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.