காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை சாட்டி தவறான நடவடிக்கையில் சில நிறுவனங்கள் ஈடுபடுவதாக உறவுகள் குற்றச்சாட்டு…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிள்ளைகளை தேடி முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 மார்ச்  8 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு   போராட்டமானது இன்று 737வது நாளாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற மக்கள் சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின்  உடைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உடைய இணைப்பாளர் அவர்கள் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது  தாங்கள் இலங்கை அரசாங்கத்தினால் எந்தவித தீர்வும் கிடைக்காது என்ற அடிப்படையிலேயே சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வரும் வகையில் தங்களுடைய உறவுகளை சாட்டி பல நிறுவனங்கள் தவறான வழியில் பிரச்சாரங்களை செய்வதோடு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற நிதிக்காக தங்களுடைய தேவைகளுக்காக தங்களுடைய உறவுகளைபிழையான  பாதைக்கு இட்டுச் செல்வதாக அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மக்களை சென்று தவறான முறையில் வழிநடத்தி அவர்களுடைய இரத்த மாதிரிகள்பெற்ற சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் இவ்வாறாக தங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் நிறுவனங்கள் தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை அவதானமாக இருக்குமாறும் அவர்கள் உங்களிடம் வருகின்ற போது அந்த தகவல்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்திற்கு அறியப்படுத்துமாறும்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார்

இதேவேளை தொடர்ச்சியாக கவனயீர்ப்பு  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்களும் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்து வாலிபர் சங்கம்செண்பகம்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்வெளிநாடு
Comments (0)
Add Comment