காணாமல் போனோர் அலுவலகத்தின் இரண்டாவது சந்திப்பு மாத்தறை மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பு
இன்றைய தினம் காலை 09.30 மணி முதல் காணாமல் போனோர் அலுவலகத்தின் அலுவலர்கள் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்திக்க உள்ள ,அதேவேளை சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் அதன் முதல் சந்திப்பு கடந்த 12ம் திகதி மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது..