காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் செயற்பாட்டு பொறிமுறைகள் எதிர்வரும் மே மாதம் அளவிலேயே ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பான பயணியகத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும், பணியாளர்களை தெரிவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
மேலும் மே மாதத்தில் பணியாட்களை உள்வாங்கப்பட்டு பணியகத்தின் செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.