காலவரையின்றி மூடப்பட்டுள்ளது கிழக்கு பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள்.

கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி கற்கை பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தின் தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி கற்கை பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தொடர்பாடல் மற்றும் வணிக கல்வி கற்கை பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த  பீடத்தின் மாணவர்கள் கடந்த முதலாம் திகதி முதல் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் மாணவர்கள் தொடர்ந்தும் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக  இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தொடர்பாடல் மற்றும் வர்த்தக கல்வி பீடத்தின் திருகோணமலை வளாக பீடாதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த இரு  பீடங்களின்  சகல கல்வியாண்டு கற்கை நெறிகளும்  கல்வி நடவடிக்கைகள் யாவும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்வி நடவடிக்கைகள்கிழக்கு பல்கலைக்கழகம்தொடர்பாடல்வணிக கல்வி
Comments (0)
Add Comment