காலி தடல்ல பிரதேச கடற்கரையில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் நேற்றைய தினம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையிலேயே சிறுமியின் சடலம் கீடக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.