ஹிங்தோட்ட விதானகொட பகுதியில், கடந்த 16ஆம் திகதியன்று இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, வெ ளி பிரதேசங்களைச் சேர்ந்த சிலர், நேற்றிரவு தாக்குதல்களை மேற்கொண்டனர் என்றும் அறியமுடிகின்றது.
சம்பவத்தையடுத்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு சட்டம் இன்னும் அமுலில் இருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.