கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் தினந்தோறும் பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டு காயம் மற்றும் உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் கால்நடை வளர்ப்போர் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும்,
தவறின் பிரதேச சபை சட்ட விதிகளுக்கமைய கட்டாக்காலிகளாக பிரதான வீதிகள் நகர்ப்பகுதிகள் மற்றும் ஏனைய வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடுகின்ற கால்நடைகளை கட்டுப்படுத்த சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்ப் மேலும் தெரிவித்துள்ளார்.