காவற்துறையினரை மிரட்டிய அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக

களியக்காவிளையில் பிளக்ஸ் பேனர் வைத்த விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளருக்கு தொலைபேசி மிரட்டல் விடுத்த அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவரை வாழ்த்தி கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் , நான்கு சாலை இணையும் சந்திப்பில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கான கூண்டை மறைத்து பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன.    இடையூராக இந்த பேனர்களை களியாக்காவிளை காவல்ஆய்வாளர் சாம்சன் என்பவர் அகற்றினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலாளர் உதயகுமார் தொலைபேசியில் , ஆய்வாளர் சாம்சனுக்கு மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ வாட்சப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே காவல்துறை ஆய்வாளரை மிரட்டிய அதிமுக பிரமுகர் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிமுகஆய்வாளர்களியக்காவிளைகாவற்துறைதிமுகதொலைபேசிபிளக்ஸ்பேனர்மிரட்டல்விவகாரம்
Comments (0)
Add Comment