காவல்துறை மா அதிபராகும் மஹிந்தவின் விசுவாசி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஸவின் விசுவாசியொருவரை காவல்துறை மா அதிபராக நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க காவல்துறை மா அதிபராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் தற்போதைய காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பதவியிலிருந்து ஒய்வு பெற்றுக்கொள்ளவுள்ளார்.

ஏப்ரல் மாதம் 12ம் திகதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளவுள்ளார். எவ்வாறெனினும், பிரதிக் காவல்துறை மா அதிபர் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதம பாதுகாப்பு உத்தியோகத்தராக விக்ரமசிங்க கடமையாற்றி வருகின்றார் என்பது குறி;ப்பிடத்தக்கது. விக்ரமசிங்க பொலனறுவையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.கே. இளங்கக்கோன்எஸ்.எம். விக்ரமசிங்கபொலிஸ் மா அதிபர்மகிந்த
Comments (0)
Add Comment