காவிரி நீர் பங்கீடு: கர்நாடகாவில் ஆக.27-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆகஸ்ட்.27-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, கர்நாடக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்படும் என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து விவாதிக்க பெங்களூரு, விதானசௌதாவில் ஆக.27-ஆம் தேதி அனைத்துக்கட்சிக்கூட்டம் நடக்கும். இதில் சட்டப்பேரவை, சட்டமேலவையில் உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்றார் அவர்.

அனைத்துக் கட்சிக் கூட்டம்கர்நாடகாகாவிரி நீர்நீர்வளத்துறை
Comments (0)
Add Comment