தில்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேற்பார்வைக்குழு கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு நீர் திறக்கும்படி உத்தரவிடப்பட்டது. இதற்கு, கர்நாடகா அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், நீர் தர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் தமிழகத்திற்கு எதிராக மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக, கர்நாடகா மாநில போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.