காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பாமக சார்பில் வரும் 8ம் தேதி போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால், காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என தமிழ்நாட்டு விவசாயிகள் வச்சிருந்த நம்பிக்கையை மத்திய அரசு கிள்ளி எறிந்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறி தமிழ்நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசு செய்த துரோகம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையே அனைத்து மாநிலங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான். கூட்டாட்சி முறையின் தாயாக விளங்கும் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களையும் குழந்தைகளைப் போன்று பாவித்து சமநீதி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காவிரிதமிழ்நாடுபோராட்டம்மேலாண்மைராமதாஸ்வாரியம்விவசாயிகள்
Comments (0)
Add Comment