காவிரி விவகாரத்தில் சட்டப்பூர்வமான தீர்வையே காண வேண்டும் என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பதவி காலம் முடிந்தவுடன் விதிமுறைகளின்படி புதிய ஆளுநரை குடியரசுத்தலைவர் நியமிப்பார் என தெரிவித்தார். மாயமான ஏ என் 32 விமானத்தை தேடுவதற்கு அனைத்துவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், காவிரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சட்டப்பூர்வமான தீர்வை காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு வெங்கையா நாயுடு பதிலளிக்க மறுத்தார்.