அக்டோபர் 4ம் தேதிக்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு அடுத்த 7 நாட்களுக்கும் தினமும் 6ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் சித்தராமையா அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார்.
இதையடுத்து பெங்களூரில் இன்று நடந்த சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்க முடிவு செய்துள்ளது. நான்கு அணைகளிலும் சேர்த்து 34.13 டி.எம்.சி தண்ணீர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.