காவிரி விவகாரம் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

காவிரி தண்ணீரை முறையாக தமிழகத்து வழங்க கர்நாடக மாநிலத்துக்கு அறிவுறுத்தக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (சனிக்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கடந்த 5.2.2007-ல் பிறப்பிக்கப்பட்ட காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில்லை. குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முடியாததற்கு கர்நாடகா முறையாக தண்ணீர் வழங்காததே காரணம்.

கர்நாடகா வழங்க வேண்டிய 94 டிஎம்சி தண்ணீரில் 64 டிஎம்சியே வழங்கியுள்ளது. 31.08.2015-க்குள் வழங்க வேண்டிய 27.557 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்கவில்லை. எனவே 27.557 டிஎம்சி நீரை வழங்குமாறு கர்நாடக அரசை தாங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) அறிவுறுத்த வேண்டும்.

காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை வாரியம் அமைக்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடிதம்கர்நாடக அரசுகாவிரி நீர்குறுவை சாகுபடிநடவடிக்கைபிரதமர் மோடிமுதல்வர் ஜெயலலிதா
Comments (0)
Add Comment