வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இடையிலான சந்திப்புக்கு சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகில் பெரும்பான்மையான நாடுகளில் வடகொரியாவுக்கு தூதரக உறவு என்பது கிடையாது.
இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் வடகொரியாவிற்கு இடையில் நெருக்கமும், வலுவான பொருளாதார பின்னணியும் இருந்து வருகின்றது.
அதோடும் சிங்கப்பூர் வடகொரியாவுடனும் அமெரிக்காவுடனும் சுமூக உறவை கொண்டுள்ளது.
அணு ஆயுதங்களை எதிர்க்கும் நாடுகளில் சிங்கப்பூர் முதன்மையானது என்பதும், உலக அமைதியை பெரிதும் விரும்பும் நாடு என்பதாலும் சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் உலகில் ஏனைய எந்த நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஏதேனும் ஒரு தலைவருக்கு பொதுமக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவுகின்றது.
ஆனால் சிங்கப்பூரில் போராட்டங்கள் நடத்த தடை என்பதால் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு சிங்கப்பூரை தேர்வு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.