நேற்று இரவு இந்த பள்ளியில் காவலாளியாக செல்வராஜ் என்பவர் பணியில் இருந்தார். நள்ளிரவு முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் முன்பக்க கேட்டின் மேல் ஏறி பள்ளிக்குள் வந்து அலுவலக பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு இருந்த 2 டிராயர்களை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு பின்பக்கம் உள்ள கதவின் பூட்டை உடைத்து அந்த வழியாக வெளியேறி விட்டனர்.
இந்தக் கொள்ளை குறித்து கோவையில் இருந்த பள்ளி தாளாளர் குமரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நேரில் வந்து கொள்ளை நடந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் யார்? என்று தெரியவில்லை. போச்சம்பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் நாலாபுறமும் வலைவீசி உள்ளனர்.
தனியார் பள்ளியில் கொள்ளை நடந்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.