கிரெடிட் கார்ட் மோசடி – மொரிசியஸ் பெண் அதிபர் ராஜினாமா

கிரெடிட் கார்டு மோசடி குற்றச்சாட்டு குறித்து மொரீஷியஸின் முதல் பெண் அதிபரான அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மொரீஷியஸின் முதல் பெண் அதிபர் அமீனா குரிப்-பகிம் . அவருக்கு லண்டனை சேர்ந்த பிளானட் எர்த் இன்ஸ்டிடியூட் என்ற  அமைப்பு கடந்த 2016ம் ஆண்டு அரசு வேலையாக பயணம் செய்யும்போது பயன்படுத்த கிரெடிட் கார்டு ஒன்றை  வழங்கியது.

அரசு வேலை தவிர்த்து தங்கள் அமைப்பின் வேலைக்காகவும் அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தது.

அமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்த போது  பிளானட் எர்த் இன்ஸ்டிடியூட் அமைப்பு வழங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தியுள்ளார்.

அதன் மூலம் சுமார் 25 ஆயிரம் டாலர் அளவிற்கு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக ஒரு தனியார் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

இதையடுத்து அரசு வேலைகளுக்காக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை தனது சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதனால் அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கையும் வலுத்தது.

இந்நிலையில், அமீனா குரிப்-பகிம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் பாராளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் மார்ச் 23-ம் தேதி வரை அவர் அதிபர் பதவியை விட்டு விலகுகிறார் என கூறப்படுகிறது.

மக்களும், பொருளாதாரமும் பாதிக்கப்படுவதை பார்க்க விரும்பாமல் அமீனா ராஜினாமா செய்துள்ளதாக அவரின் வழக்கறிஞர் யூசுப் முகமது தெரிவித்துள்ளார்.

 

அமீனா குரிப்–பாகிம்கிரெடிட் கார்டுமொரீஷியஸ்ராஜினாமா
Comments (0)
Add Comment