நாளை உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என மங்கள அமரவீர தெரிவித்துள்ளார். கடல் எல்லையை தாண்டி மீன் பிடிக்க செல்வதாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை ராணுவம் சிறை பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இவ்வாறு இலங்கை சிறைகளில் இப்போதுள்ள நிலவரப்படி 48 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் பெருவிழாவையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிகிறது.