கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளைச் சேதப்படுத்தியதோடு, அதிலுள்ள மின்கலங்களை விசமிகள் திருடிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் அதிகளவான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களால் மாவீரர் துயிலும் இல்லம் புனிதமான இடமாக நோக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தற்போது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவுகளால் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கலத்துடன் கூடிய மின்விளக்குகளே விசமிகளால் சேதமாக்கப்பட்டு அதிலுள்ள மின்கலங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.