கிளிநொச்சி கல்லாறில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது ஏற்பட்ட வாள் வெட்டில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நால்வரும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் ஒருவரை மாத்திரமே தர்மபுரம் பொலிசார் கைது செய்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக தெரிவித்து பாதிக்கப்பட்டதரப்பு, பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.