கிளிநொச்சி வட்டக்கச்சியில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கோரிக்கை…

கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் யுத்தத்தின் போது தமது கால்களை இழந்த இரண்டு சிறுவர்கள் அவர்களுக்கான வசதியை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம் பெயர்ந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் தங்கியிருந்த சமயம் குறித்த சிறுவர்கள் எறிகணை வீச்சில் தமது கால்களை இழந்துள்ளனர்.

இந்த நிலையில், வட்டக்கச்சி இராமநாதபும் பகுதியில் அவர்கள்   தமது பெற்றோர்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

தமது தேவைகளை   தீர்த்துக் கொள்ளக் கூடிய பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில் அன்றாடம் கூலி வேலைகளை நம்பி வாழும் குடும்பங்களாகவே அவர்கள்   காணப்படுகின்றனர்.

இந்நிலையில் குறைந்தது தமது  பாடசாலைக்கான போக்குவரத்து வசதிகளையாவது ஏற்படுத்தி தருமாறு  குறித்த  சிறுவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைசிறுவர்கள்பாதிப்பு.வட்டக்கச்சி
Comments (0)
Add Comment