கிழக்கு முதலமைச்சரிடம் விளக்கம் கோரியுள்ள ரணில்!

திருகோணமலை சம்பூர் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது கிழக்கு மாகாண முதலமச்சர் நசீர் அஹமட் கடற்படை உயர் அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவம் தொடர்பில் கடற்படையினரிடம் மட்டுமன்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பிடமிருந்தும் ஸ்ரீ பிரதமர் விளக்கம் கோரியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் தரப்பினது நியாயங்கள் தொடர்பிலும் விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட வேண்டாம் என பிரதமர் கடற்படையினரிடம் மட்டுமன்றி கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்னவிடம் பிரதமர் விரிவான விளக்கத்தை கோரியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பான் விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதன் பின்னர் இரண்டு தரப்பின் அறிக்கைகளையும் ஜனாதிபதியிடம் பிரதமர் சமர்ப்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்சினை குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் இரண்டு தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்.

கடற்படைகிழக்குமுதலமைச்சர்மைத்திரிரணில்விசாரணைவிளக்கம்
Comments (0)
Add Comment