கீதாவை வளர்த்த எதி நிறுவனத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி : பிரதமர் மோடி

பாகிஸ்தானில் இந்திய பெண் கீதாவை பராமரித்து வந்த எதி தொண்டு நிறுவனத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

 இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மோடி, எதி தொண்டு நிறுவனத்திற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கீதா, 15 ஆண்டுகளுக்கு முன் வழி தவறி பாகிஸ்தானின் லாகூருக்கு சென்றார். அங்கு அவரை எதி என்ற தொண்டு நிறுவனம், கீதா என பெயரிட்டு வளர்த்து வந்தது.

 தற்போது 23 வயதாகும் கீதாவின் பெற்றோர் பீகாரில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவர் கராச்சியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு, எதி தொண்டு நிறுவன ஊழியர்களுடன் வந்த கீதாவை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை கீதா சந்தித்தார்.

1 கோடி ரூபாய் நிதிஎதி நிறுவனம்கராச்சிகீதாபாகிஸ்தான்பிரதமர் மோடி
Comments (0)
Add Comment