குடாநாட்டில் 271 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்..

யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள  குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகவலை  யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன

மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய காரணிகள் காணப்படுகின்றதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வு கூறப்படுவதால் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரப்பிரிவினர்  அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

271 பேர்எச்சரிகைடெங்குநோயாளர்கள்யாழ்
Comments (0)
Add Comment