அவர்களைத் தேடுப் பணியில் தொடர்ந்தும் இன்றும் (16) மீட்புக் குழுவினர், தமது பணிகளை முன்னெடுத்து வருவதாக, இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார். இதேவேளை, உயிரிழந்தோரின் இறுதிக் கிரியைகள், இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில், சுமார் 150 வீடுகள், குப்பைக்குள் சிக்கிக்கொண்டன.